இமாசலபிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர்

இமாசலபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் நேற்று பா.ஜ.க.வில் இணைந்தனர்.

Update: 2022-08-18 00:02 GMT

புதுடெல்லி,

பா.ஜ.க ஆளும் இமாசலபிரதேச மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் அங்கு காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் நேற்று பா.ஜ.க.வில் இணைந்தனர்.

நலகர் தொகுதி எம்.எல்.ஏ.வும், காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவருமான லக்விந்தர் ராணா மற்றும் காங்ரா தொகுதி எம்.எல்.ஏ. பவன் காஜல் ஆகிய இருவரும் தலைநகர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் இமாசலபிரதேச மாநில முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்கூர் முன்னிலையில் தங்களை பா.ஜ.க.வில் இணைத்துக்கொண்டார். இந்த நிகழ்வின்போது பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங்கும் உடன் இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்