பெங்களூருவில் அடுத்த சில ஆண்டுகளில் உள்கட்டமைப்பு பணிகளால் 1,900 மரங்கள் அழியும் அபாயம்

பெங்களூருவில் அடுத்த சில ஆண்டுகளில் உள்கட்டமைப்பு பணிகளால் 1,900 மரங்கள் அழியும் அபாயம் உள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2022-09-24 22:03 GMT

பெங்களூரு: பெங்களூருவில் நகர்மயமாக்கல் காரணமாக விரைவில் 1,900 மரங்கள் அழிக்கப்பட உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அதில் கூறியிருப்பதாவது:-

பெங்களூருவில் உள்ள மரங்களின் எண்ணிக்கை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் பெங்களூருவில் நகர்மயமாக்கல் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. அடுத்து சில ஆண்டுகளில் பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளுக்காக மரங்கள் வெட்டப்பட உள்ளன. ஆய்வுப்படி சுமார் 1,900 மரங்களை அடுத்த சில ஆண்டுகளில் அழிக்க வாய்ப்பு உள்ளது தெரியவந்துள்ளது. மேலும் வெளிவட்ட மெட்ரோ பணிகளுக்காக 114 மரங்கள் வெட்டி அழிக்கப்பட உள்ளன. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், வளர்ச்சி பணிகளுக்காக மரங்கள் வெட்டப்படுகின்றன. ஆனால் பெங்களூருவில் மிகவும் பழமையான மற்றும் மருத்துவ குணங்கள் கொண்ட மரங்கள் உள்ளன. அவற்றை அழித்துவிட்டு, புதிய மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டாலும் அது ஈடாகாது என்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்