கர்நாடகத்தில் 1,624 பேருக்கு கொரோனா பாதிப்பு

கர்நாடகத்தில் 1,624 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-07-27 22:33 GMT

பெங்களூரு: கர்நாடகத்தில் புதிதாக 33 ஆயிரத்து 336 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 1,624 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 1,176 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தட்சிண கன்னடா, உடுப்பியில் தலா ஒருவர் இறந்தனர். 28 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. இதுவரை 39 லட்சத்து 99 ஆயிரத்து 766 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

40 ஆயிரத்து 94 பேர் இறந்து உள்ளனர். நேற்று 1,647 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். 39 லட்சத்து 50 ஆயிரத்து 794 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்