ஹாரன் அடித்தும் வழிவிடாததால் காது கேளாத நபரை கத்தியால் குத்தி கொலை செய்த சிறுமி

ஹாரன் அடித்தும் வழிவிடாததால் காது கேளாத நபரை கத்தியால் குத்திக் கொன்ற 16 வயது சிறுமியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-26 10:43 GMT

ராய்ப்பூர்

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் 16 வயது சிறுமி தனது தாயுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, போக்குவரத்து நெரிசலிலில் முன்னே சென்ற இருசக்கர வாகனத்தை முந்தி செல்வதற்கு தொடர்ந்து ஹாரன் அடித்துள்ளார்.

அந்த வாகனத்தில் சென்ற 40 வயதுடைய நபர் வழிவிட மறுக்கவே ஆத்திரமடைந்த சிறுமி அந்த நபருடன் சண்டை போட்டு உள்ளார். பின்னர் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த நபரின் கழுத்தில் சரமாரியாக குத்தி கொலை செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்