உபி: நுபுர் சர்மாவை கைது செய்ய கோாி நடந்த போராட்டத்தில் வன்முறை - 136 போ் கைது

உத்தரபிரதேசத்தில் நுபுர் சர்மாவை கைது செய்ய கோாி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இந்த சம்பவத்தில் 136 போ் கைது செய்யப்பட்டனா்.

Update: 2022-06-11 02:39 GMT

Image Courtesy: ANI

லக்னோ,

நபிகள் நாயகம் பற்றி பா.ஜனதா செய்தித்தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிண்டால் ஆகியோர் தெரிவித்த கருத்துகள், சர்ச்சையை உருவாக்கி உள்ளது. இந்நிலையில், அவர்களை கைது செய்யக்கோரி நேற்று நாடு முழுவதும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ, பிரக்யாராஜ், மொரதாபாத், சகாரன்பூர், ஆகிய இடங்களிலும் போராட்டங்கள் நடந்தன. மொரதாபாத், பிரக்யாராஜ் ஆகிய இடங்களில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது. போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர்.

இந்த சம்பவம் தொடா்பாக 136 பேர் கைது செய்யப்பட்டுள்ளனா். இது குறித்து சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குநர் பிரசாந்த் குமார் கூறுகையில், உத்தரபிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 136 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, சஹரன்பூரில் இருந்து 45 பேரும், பிரயாக்ராஜில் 37 பேரும், அம்பேத்கர் நகரில் 23 பேரும், ஹத்ராஸில் 20 போ்,மொராதாபாத்தில் 7 போ், ஃபிரோசாபாத் மாவட்டத்தில் இருந்து 4 பேர் என மொத்தம் 136 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். என அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்