தலைவிரித்தாடும் ரீல்ஸ் மோகம்.. மரத்தில் கயிறுகட்டி தொங்கிய சிறுவன்.. அடுத்து நடந்த விபரீதம்

மரத்தில் கயிறு கட்டி தூக்கில் தொங்கியவாறு சிறுவன் இருந்தநிலையில் சக நண்பர்கள் அதனை வீடியோ எடுத்துள்ளனர்.;

Update:2024-07-22 02:29 IST

கோப்புப்படம்

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் மோரினா மாவட்டத்தை சேர்ந்தவன் கரண் பர்மார் (வயது 11). 7-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் நண்பர்கள் சிலருடன் தனது வீட்டின் அருகே கரண் விளையாடி கொண்டிருந்தான்.

அங்குள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ளும் வகையில் தான் நடிப்பதாகவும், அதனை சமூக வலைத்தளத்தில் 'ரீல்ஸ்' வீடியோவாக பதிவேற்றி விளையாடி மகிழலாம் எனவும் நண்பர்களிடம் கரண் கூறியுள்ளான். அதன்படி மரத்தில் கயிறு கட்டி தூக்கில் தொங்கியவாறு கரண் இருந்தநிலையில் சக நண்பர்கள் அதனை வீடியோ எடுத்துள்ளனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக கழுத்து இறுக தொடங்கியது. இதனால் கரண் வலியில் அலறி துடித்துள்ளான். இருப்பினும் தத்ரூபமாக நடிப்பதாக நம்பி அவனுடைய நண்பர்கள் தொடர்ந்து வீடியோ எடுத்துள்ளனர். இதனைதொடர்ந்து கழுத்து இறுகியதில் கரண் தூக்கில் தொங்கியவாறு மயக்கம் அடைந்தான்.

தகவல் அறிந்த அவனுடைய பெற்றோர் கரணை உடனடியாக மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவனை பரிசோதித்த டாக்டர்கள் கரண் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். ரீல்ஸ் வீடியோ எடுக்க முயன்றபோது விளையாட்டு விபரீதமானதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்