மும்பையில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் ரூ.34.85 லட்சம் கொள்ளையடித்து சென்ற 11 பேர் கைது..!

மும்பையில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் கொள்ளையடித்து சென்ற 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-08-01 12:20 GMT

மும்பை,

மும்பையில் உள்ள ஐரோலி பகுதியில் கடந்த மாதம் 21ம் தேதி ஊழல் தடுப்பு அதிகாரிகள் எனக்கூறி கும்பல் ஒன்று ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வீட்டில் சோதனை செய்தனர். பின்னர் அரசு அதிகாரி மற்றும் அவரது மனைவியை அடித்துவிட்டு ரூ.34.85 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். சம்பவம் குறித்து அரசு அதிகாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவலர்கள் திருடர்களை தேடிவந்தனர்.

இந்நிலையில், குற்றம் தொடர்பாக 11 பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்த ஒரு வாரத்தில் புனே, தானே மற்றும் மும்பையில் இது போன்ற குற்றங்களில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. மேலும், அவர்களிடம் இருந்து ரூ.13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் குற்றத்திற்கு பயன்படுத்திய கார்கள், துப்பாக்கிகளை காவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர். கொள்ளையடித்து சென்ற மீதி பணத்தை மீட்க காவலர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்