தமிழ்நாட்டில் 1,070 சிறுத்தைகள் - கணக்கெடுப்பில் தகவல்

இமயமலை, கங்கை சமவெளி ஆகிய இடங்களில் சிறுத்தைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

Update: 2024-02-29 22:25 GMT

புதுடெல்லி,

சிறுத்தைகள் கணக்கெடுப்பு பணியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு அறிக்கை வெளியிடப்படுகிறது. இந்த வகையில் சமீபத்திய கணக்கெடுப்பின் அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை மந்திரி பூபேந்தர் யாதவ் நேற்று டெல்லியில் வெளியிட்டார்.

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் இந்திய வனவிலங்குகள் நிறுவனம் ஆகியவை மாநில வனத்துறைகளுடன் இணைந்து சிறுத்தைகள் குறித்த கணக்கெடுப்பை நடத்தின. சிறுத்தைகள் அதிகம் வாழும் பகுதிகளான மேற்குத்தொடர்ச்சி மலை, தக்காண பீடபூமியின் வறண்ட பகுதி, சிவாலிக் மலைகள், வட இந்தியாவின் தெராய், இமயமலை, கங்கை சமவெளி ஆகிய இடங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 13 ஆயிரத்து 874 சிறுத்தைகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மத்தியபிரதேசத்தில் 3,907 சிறுத்தைகள் உள்ளன. இதனையடுத்து மராட்டிய மாநிலத்தில் 1,985 சிறுத்தைகளும், கர்நாடகத்தில் 1,879 சிறுத்தைகளும், தமிழ்நாட்டில் 1,070 சிறுத்தைகளும் இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு அறிக்கையின்படி இந்தியாவில் 12 ஆயிரத்து 852 சிறுத்தைகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்