ஒரு குழந்தைக்கு 100 மரங்கள் சிக்கிம் அரசு முடிவு

சிக்கிம் மாநிலத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 100 மரக்கன்றுகள் நட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

Update: 2023-02-03 19:16 GMT

காங்டாக், 

சிக்கிம் மாநிலத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 100 மரக்கன்றுகள் நட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

மரம் ஒன்றை நடுங்கள், பாரம்பரியம் ஒன்றை விட்டுச் செல்லுங்கள் என்ற இத்திட்டத்தை முதல்-மந்திரி பிரேம் சிங் தமாங் நேற்று முன்தினம் தொடங்கிவைத்தார்.

குழந்தைப் பிறப்பை நினைவுகூரும்விதமாக இவ்வாறு மரக்கன்றுகள் நடுவது, குழந்தை, பெற்றோர் மற்றும் இயற்கைக்கு இடையிலான பிணைப்பை வலுப்படுத்தும் என்று சிக்கிம் அதிகாரிகள் கூறுகின்றனர்.

திட்டத்தை தொடங்கிவைத்த முதல்-மந்திரி பிரேம் சிங் தமாங் கூறுகையில், 'ஒரு குழந்தை வளர வளர, அதற்காக நடப்பட்ட மரங்களும் வளர்வதைக் கவனிப்பது, பூமிக்கு ஒரு குழந்தையின் வருகையை வரவேற்கும், அதை கொண்டாடும் நல்லதொரு அடையாளம் ஆகும். இது போன்ற ஒரு பசுமை முயற்சி, இந்தியாவிலேயே முதல்முறையாக சிக்கிமில்தான் மேற்கொள்ளப்படுகிறது' என்றார்.

தொடக்க நிகழ்ச்சியின் அடையாளமாக, புதிதாக பெற்றோர் ஆன சில தம்பதியருக்கு மரக்கன்றுகளை முதல்-மந்திரி பிரேம் சிங் தமாங் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்