கனமழைக்கு மூதாட்டி வீடு இடிந்தது

கனமழைக்கு மூதாட்டி வீடு இடிந்தது.;

Update:2022-05-18 21:48 IST
ஓசூர்:
ஓசூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த மழையால் ஓசூர் கே.சி.சி. நகரில் சாலை துண்டிக்கப்பட்டது. மேலும் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இந்தநிலையில் பாகூர் கிராமத்தில் பெய்த கனமழை காரணமாக இரவில் எல்லம்மாள் (வயது 70) என்பவரது வீடு இடிந்து விழுந்தது. மூதாட்டி உடனடியாக வீட்டை விட்டு வெளியேறியதால் காயமின்றி உயிர் தப்பினார். ஆதரவின்றி தவித்து வரும் தனக்கு அரசு உதவ வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்