தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் தர்மபுரியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கூட்டம்

தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் தர்மபுரியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-05-18 16:18 GMT
தர்மபுரி:
தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கூட்டம் தர்மபுரி குமாரசாமிப்பேட்டை வாரியார் திடலில் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சரவணன் வரவேற்று பேசினார். தலைமை நிலைய செயலாளர் கனல் கண்ணன், மாநில ஊடக பிரிவு ஒருங்கிணைப்பாளர் குமரவேல், மாநில மகளிரணி செயலாளர் முத்துலட்சுமி வீரப்பன், மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் காந்தி குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் நினைவு தின ஜோதியை ஏற்றி வைத்து பேசினார். 
அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் தமிழர்களின் உரிமைக்காக எப்போதும் நாங்கள் குரல் கொடுப்போம். நான் தி.மு.க. கூட்டணியில் இருந்தாலும் சட்டமன்றத்தில் எந்த பிரச்சினை என்றாலும் முதலில் நான்தான் குரல் கொடுக்கிறேன். நமது கட்சி கட்சி தொண்டர்கள் மக்களின் உரிமைக்காக என்றும் போராட தயாராக இருக்க வேண்டும் என்று கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட தலைவர் மாது, நகர செயலாளர் சீனிவாசன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சரவணன், மாவட்ட இளம்புயல் பாசறை செயலாளர் வசந்த தாஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட வக்கீல் பிரிவு இணை செயலாளர் பிரசாந்த் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்