தியாகதுருகம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

தியாகதுருகம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-05-18 16:15 GMT
கண்டாச்சிமங்கலம், 

தியாகதுருகம் அருகே பிரிதிவிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜி (வயது 57), விவசாயி. சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்