தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்; அமைச்சரிடம் மனு

தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என அமைச்சரிடம் மனு கொடுக்கப்பட்டது.

Update: 2022-05-18 14:36 GMT
தென்காசி:
தென்காசி நகராட்சி தலைவர் சாதிர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். அதில், தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலுக்கு கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். தற்போது இந்த காலம் முடிவடைந்து மேலும் 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். மேலும் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களும் கோவிலுக்கு வந்து செல்கிறார்கள். எனவே இந்த கோவிலின் கும்பாபிஷேகத்தை உடனடியாக நடத்த வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
இதனை பெற்றுக் கொண்ட அமைச்சர், விரைவில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

மேலும் செய்திகள்