ஊட்டி அரசு கலைக் கல்லூரிக்கு நுழைவு வாயில்
ஊட்டி அரசு கலைக் கல்லூரிக்கு நுழைவு வாயில்;
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் காலத்தில் முதல்முறையாக கட்டப்பட்ட கல் கட்டிடமான ஊட்டி அரசு கலைக் கல்லூரிக்கு ரூ.8½ லட்சத்தில் புதிதாக நுழைவு வாயில் கட்ட முடிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பணிகள் கொரோனாவுக்கு மத்தியிலும் விறுவிறுப்பாக நடந்தது. இந்தநிலையில் இந்த நுழைவாயில் கட்டிட பணிகள் முடிந்து திறப்பு விழா நடந்தது. இதில் நீலகிரி தொகுதி எம்.பி.ராசா கலந்து கொண்டு நுழைவு வாயிலை திறந்து வைத்தார்.
இதில் கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி, பேராசிரியர்கள் ஷோபனா, எபினேசர் மற்றும் மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இது முன்னதாக விழாவில் தனியார் நிறுவனம் சார்பில் கணினி அறிவியல் துறைக்கு டிஜிட்டல் கரும்பலகை உள்ளிட்ட உபகரணங்கள் தரப்பட்டன.