கேபிள் டி.வி. ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
பாவூர்சத்திரம் அருகே கேபிள் டி.வி. ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூர், ஆவுடைசிவன்பட்டி தெருவை சேர்ந்த மதியழகன் மகன் கண்ணன் (வயது 30). இவர் பாவூர்சத்திரத்தில் ஒரு தனிநபர் நடத்தி வரும் கேபிள் டி.வி. நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். மேலும் இவர் திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் பணிபுரிந்த கேபிள் டி.வி. நிறுவன அலுவலகத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.