பிச்சைக்காரரை தாக்கியவர் மீது வழக்கு
பிச்சைக்காரரை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.;
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே உள்ள பால்க்கரையை சேர்ந்த ராமன் மகன் ஆண்டி (வயது70). பிச்சை எடுத்து வருகிறாராம். இவர் ராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோவிலில் அன்னதானம் சாப்பிட சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஒருவர் ஆண்டியை கண்டு அவரை தரக்குறைவாக பேசி கல்லால் சரமாரியாக தாக்கினாராம். இதில் படுகாயம் அடைந்த ஆண்டி சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ஆண்டி அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.