சுரண்டை அருகே நிதி நிறுவன ஊழியரை வழிமறித்து தாக்கி ரூ.5½ லட்சம் கொள்ளை
சுரண்டை அருகே நிதி நிறுவன ஊழியரை வழிமறித்து தாக்கி ரூ.5½ லட்சத்தை, முகமூடி அணிந்த மர்மநபர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர்;
சுரண்டை:
சுரண்டை அருகே நிதி நிறுவன ஊழியரை வழிமறித்து தாக்கி ரூ.5½ லட்சத்தை, முகமூடி அணிந்த மர்மநபர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர்.
நிதி நிறுவன ஊழியர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி மகன் கோபிராஜ் (வயது 25). இவர் சங்கரன்கோவிலில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று காலை இவர் சங்கரன்கோவிலில் இருந்து சுரண்டையில் உள்ள நிதி நிறுவன கிளைக்கு சென்று அங்கு வசூலான பணத்தை எடுத்துக் கொண்டு மீண்டும் சங்கரன்கோவிலை நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
ரூ.5½ லட்சம் கொள்ளை
சுரண்டை அருகே வீரசிகாமணி வடபுறம் கே.வி.ஆலங்குளம் பகுதியில் சென்றபோது, பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென கோபிராைஜ வழிமறித்தனர். அவரை தாக்கி, அவர் வைத்திருந்த ரூ.5½ லட்சத்தை கொள்ளையடித்துச்சென்றனர்.
இதுகுறித்து கோபிராஜ் கொடுத்த புகாரின்பேரில் சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடையநல்லூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, பணத்தை கொள்ளையடித்து தப்பிய முகமூடி அணிந்த மர்மநபர்கள் 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.