முக்காணியில் தந்தை, மகன் மீது தாக்குதல்: தம்பதிக்கு வலைவீச்சு

முக்காணியில் தந்தை, மகன் மீது தாக்குதல் நடத்திய தம்பதியை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2022-05-18 11:30 GMT
ஆறுமுகநேரி:
முக்காணி நேருஜி நகரை சேர்ந்த செல்லையா மகன் சக்திவேல் (வயது 56). தொழிலாளி. இவரது மகன் செல்வக்குமார். இவரது மனைவி மல்லிகா. இவர்கள் 3 பேரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று சக்திவேல் தனது வீட்டில் உடைந்து இருந்த மேற்கூரையை சரி செய்து கொண்டிருந்தாராம். 
அப்போது அதில் இருந்த தூசி பக்கத்திலுள்ள பேச்சிமுத்து வீட்டிற்குள் விழுந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த பேச்சிமுத்துவும், அவரது மனைவி மாரியம்மாளும் சக்திவேலை தகாத வார்த்தையால் பேசியுள்ளனர். இதை  செல்வகுமரன், மல்லிகா ஆகியோர் கண்டித்துள்ளார். அப்போது, பேச்சிமுத்து கீழே கிடந்த விறகு கட்டையால் செல்வகுமரனை தலையில் அடித்ததில் பலத் ரத்த காயம் ஏற்பட்டு கீழே விழுந்தள்ளார். அவரை தடுக்க சென்ற சக்திவேலையும் விறகு கட்டையால் பேச்சிமுத்து அடித்து உள்ளார். அவருக்கும் ரத்தகாயம் ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் காயமடைந்த தந்தை, மகனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேச்சிமுத்து, மாரியம்மாள் ஆகியோரை தேடிவருகின்றனர்..

மேலும் செய்திகள்