தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

ஓமலூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். போலீசுக்கு தெரியாமல் உடலை அடக்கம் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-05-18 02:04 GMT
ஓமலூர்:
ஓமலூர் அடுத்த பாலிக்கடை காலனி பகுதியை சேர்ந்தவர் அஜித் (வயது 30), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கவிதா (27). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. நேற்று மாலை 6 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அஜித், சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த அவருடைய மனைவி கவிதா மற்றும் உறவினர்கள் தூக்கில் தொங்கிய அஜித்தின் உடலை இறக்கி உள்ளனர். 
பின்னர் போலீசுக்கு தெரிவிக்காமல் உடல் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அஜித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை ெசய்து கொண்ட தொழிலாளியின் உடலை போலீசுக்கு தெரியாமல் அடக்கம் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்