இரும்பு தளவாடங்களை திருடிய வாலிபர் சிக்கினார்

இரும்பு தளவாடங்களை திருடிய வாலிபர் சிக்கினார்.

Update: 2022-05-18 02:00 GMT
வாழப்பாடி:
சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேட்டுப்பட்டி பகுதியில் மழைநீர் வாய்க்கால் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதற்காக அந்த பகுதியில் கட்டுமான தளவாட பொருட்களை வைத்திருந்தனர். இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி அங்கு வைக்கப்பட்டு இருந்த ரூ.1½ லட்சம் மதிப்பிலான இரும்பு தளவாட பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டதாக வாழப்பாடி போலீசில் கட்டுமான பணியை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவன மேலாளர் சதீஷ்குமார் (வயது 28) வாழப்பாடி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் தளவாட பொருட்களை நள்ளிரவில் திருடியது, மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த வெள்ளி கொலுசு தொழில் செய்துவரும் ரமேஷ் (37) என்பவர் என தெரியவந்தது. இதையடுத்து நேற்று மாலை அவரைபோலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்