நிலம் மோசடி: 6 பேர் மீது வழக்கு

நிலம் மோசடி 6 பேர் மீது வழக்கு

Update: 2022-05-18 00:03 GMT
நெல்லை:
நெல்லை மேலப்பாளையம் அந்தோணி நகர் பீடி தொழிலாளர் காலனியை சேர்ந்தவர் மாபுப் பாதுஷா (வயது 62). அந்த பகுதியில் இவருக்கு சொந்தமான பிளாட் உள்ளிட்ட நிலத்தை சிலர் கூட்டு சேர்ந்து மோசடி செய்து விட்டதாக நெல்லை மாநகர நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவுப்படி, நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் வழிகாட்டுதல்படி நெல்லை மாநகர நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி விசாரணை நடத்தினர். நிலம் மோசடி தொடர்பாக மேலகருங்குளம் வேம்பையா, இவருடைய மனைவி செல்வநாயகி, நாங்குநேரி சுடலைவடிவு, மேலப்பாளையம் பேச்சியம்மாள், பசுங்கிளி, சவுந்தர் ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்