நெல்லையில் ‘மாடல் அழகி’ ஆக்குவதாக கூறி இளம்பெண்ணை நிர்வாண புகைப்படம் எடுத்து ‘வாட்ஸ்-அப்’பில் பரப்பிய கும்பல் ரெயில்வே ஊழியர் உள்பட 4 பேர் கைது

நெல்லையில் ‘மாடல் அழகி’யாக்குவதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ைண நிர்வாண புகைப்படம் எடுத்து ‘வாட்ஸ்-அப்’பில் பரப்பிய ரெயில்வே ஊழியர் உள்பட 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-05-17 23:41 GMT
நெல்லை:
நெல்லையில் ‘மாடல் அழகி’யாக்குவதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ைண நிர்வாண புகைப்படம் எடுத்து ‘வாட்ஸ்-அப்’பில் பரப்பிய ரெயில்வே ஊழியர் உள்பட 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
ரெயில்வே ஊழியர்
நெல்லை குருந்துடையார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சுகுமாறன் (வயது 36). இவர் ரெயில்வே கேட் கீப்பராக பணியாற்றி வருகிறார். மேலும், அழகுசாதன பொருட்கள் விற்பனையும் செய்து வருகிறார்.
இந்த நிலையில் அவரிடம், 20 வயதான இளம்பெண் ஒருவர் அவ்வப்போது அழகுசாதன பொருட்கள் வாங்குவதற்கு வந்துள்ளார். அப்போது சுகுமாறன் மற்றும் அவருடைய உறவினரான கீழ வீரராகவபுரம் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் (46) ஆகியோர் அந்த பெண்ணிடம், உன்னை மாடல் அழகியாக ஆக்குகிறோம் என்று ஆசைவார்த்தை கூறி உள்ளனர்.
இளம்பெண் நிர்வாண புகைப்படம்
இதற்காக அந்த பெண்ணிடம் நைசாக பேசி, அவரை நிர்வாண புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது. அந்த புகைப்படங்கள் அசோக்குமாரின் செல்போனில் இருந்துள்ளன. இந்த நிலையில் அசோக்குமாரின் செல்போனை பார்த்த அவரது 19 வயது மகன், அவற்றில் இருந்த நிர்வாண புகைப்படங்களை தனது நண்பரான 16 வயது சிறுவனுக்கு ‘வாட்ஸ்-அப்’பில் அனுப்பி உள்ளார்.
அந்த புகைப்படங்களை பார்த்த அந்த சிறுவன், அவற்றை தனது செல்போன் வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ் ஆக வைத்து விட்டார்.
4 பேர் கைது
தனது நிர்வாண படம் வாட்ஸ்-அப்பில் பரவியதை அறிந்த அந்த இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி வழக்குப்பதிவு செய்து சுகுமாறன், அசோக்குமார் உள்பட 4 பேரையும் கைது செய்தார். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்