கருங்கல் அருகே ஓய்வு பெற்ற மின்ஊழியர் வீட்டில் திருட முயற்சி
கருங்கல் அருகே ஓய்வு பெற்ற மின்ஊழியர் வீட்டில் திருட முயற்சி நடந்துள்ளது.
கருங்கல்,
கருங்கல் அருகே ஓய்வு பெற்ற மின்ஊழியர் வீட்டில் திருட முயற்சி நடந்துள்ளது.
திருட முயற்சி
கருங்கல் அருகே உள்ள கப்பியறை செல்லங்கோணம் பூமுகம் வீட்டை சேர்ந்தவர் ராஜன் (வயது80). ஓய்வு பெற்ற மின்சார வாரிய ஊழியர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டி விட்டு குழித்துறையில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்றார். அங்கு சில நாட்கள் தங்கிவிட்டு சம்பவத்தன்று தனது வீட்டிற்கு வந்த போது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிமணிகள் தூக்கி வீசப்பட்டு இருந்தது.
வீட்டில் ஆட்கள் இல்லாததை கவனித்த யாரோ மர்ம நபர்கள் பின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அவர்கள் பீரோ கதவை உடைத்து அதில் இருந்த துணிமணிகளை வீசியுள்ளனர். பீரோவில் நகையோ பணமோ இல்லாததால் மர்ம நபர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து ராஜன் கொடுத்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.