நாகர்கோவிலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
வாரணாசியில் உள்ள மசூதியின் ஒரு பகுதிக்கு சீல் வைக்கும் கோர்ட்டு உத்தரவை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக்கழக பணிமனை அருகில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சத்தார் அலி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜாபர் அலி வரவேற்று பேசினார். மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் உசேன், செயலாளர் ஜப்பார், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட தலைவர் முகமதுஜிஸ்தி, மாவட்ட செயலாளர் முகமது சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பச்சைத் தமிழகம் கட்சியின் நிறுவனர் சுப.உதயகுமார், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் மணவை சாதிக் அலி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாநில பேச்சாளர் செய்யது அலி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நாகர்கோவில் மாநகர தலைவர் மீரா முகைதீன் தங்கப்பா நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.