கர்நாடகத்தில் புதிதாக 109 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் புதிதாக 109 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது
பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று 13 ஆயிரத்து 972 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் புதிதாக 109 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதில் பெங்களூரு நகரில் 95 பேருக்கும், பெங்களூரு புறநகரில் 2 பேருக்கும், தட்சிண கன்னடாவில் 6 பேருக்கும், ஹாசன், உடுப்பி, விஜயாப்புராவில் தலா ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 147 பேர் குணம் அடைந்தனர். 1,802 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.