மதனகோபாலசுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
மதனகோபாலசுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் இன்று நடக்கிறது.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் பஞ்ச பாண்டவருக்கு தனி சன்னதி கொண்ட மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதனை முன்னிட்டு காலை 10 மணி அளவில் பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி, ஆண்டாள் நாச்சியாருக்கு திருமஞ்சன நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6 மணியளவில் பெருமாள்- தாயார் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இதனையொட்டி பத்தி உலாத்தல், ஒய்யாலி நடை அலங்காரத்துடன் மாலை மாற்றும் நிகழ்ச்சியும், மாங்கல்ய தாரணம் மற்றும் பெருமாள்-தாயார் திருக்கல்யாணமும் விமரிசையாக நடக்கிறது. இதில் சிறப்பு ஹோமம் மற்றும் திருக்கல்யாண உற்சவத்தை கோவில் அர்ச்சகர் பட்டாபிராமன் மற்றும் சென்னை பட்டாச்சாரியார் குழுவினர் நடத்தி வைக்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையுடன் இணைந்து ஆண்டாள் பக்தர்கள் பேரவையினர் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.