2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை

ராமநாதபுரத்தில் வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் தற்கொலை செய்யப்பட்டனர்.

Update: 2022-05-17 19:45 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை அண்ணாநகரை சேர்ந்தவர் தங்கவேலு. இவருடைய மகன் முனியசாமி (வயது49). இவர் குடல் இறக்க நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்தும் பலனில்லாத நிலையில் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் வலிபொறுக்க முடியாமல் வீட்டின் பின்புறம் உள்ள புளிய மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி சுமதி அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 ராமநாதபுரம் தெற்கு முனியசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் நல்லசேவுகன் மகன் மருதுபாண்டி (23). கார் டிரைவராகவும், நிதி நிறுவன வசூல் அலுவலராகவும் பணியாற்றி வந்த இவர் கடன் தொல்லை காரணமாக மனம் உடைந்து காணப்பட்டாராம். இந்நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த மருதுபாண்டி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி விஜயா அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி பின்புறம் உள்ள பகுதியை சேர்ந்தவர் கூரி என்பவரின் மகன் சூர்யபிரகாஷ் (29). கார் டிரைவராக பணியாற்றி வந்த நிலையில் திடீரென்று மயக்கம் ஏற்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி யுவராணி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்