எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
மூங்கில்துறைப்பட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு நான்குமுனை சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மூங்கில்துறைப்பட்டு நகர தலைவர் ஜான்பாஷா தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர்கள் பாரூக், ரஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் தர்பார், மாவட்ட அமைப்பாளர் சிராஜூதீன் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன உரையாற்றினர். இதில் ரிஷிவந்தியம் ஒன்றிய தலைவர் இப்ராஹிம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.