கொடைக்கானலில் பகலை இரவாக்கிய மேகக்கூட்டம்
கொடைக்கானலில் மேகக்கூட்டங்கள் தரையிறங்கி பகலை இரவாக்கியது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றன.
கொடைக்கானல்:
கோடைவாசஸ் தலமான கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் நிலவி வருகிறது. இதனை அனுபவிப்பதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர்.

இந்தநிலையில் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பம் குறைந்து, குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. கொடைக்கானலில் பல்வேறு இடங்களில் நேற்று காலை கடும் குளிர் நிலவியது. அத்துடன் மேகக்கூட்டங்கள் தரையிறங்கி அவ்வப்போது சாரல் மழையை பொழிந்தன. பிற்பகல் முதல் அடர்ந்த மேகக்கூட்டங்கள் தரை இறங்கியதால் பகலும் இரவானது போன்று மாறியது.
இதனால் அனைத்து வாகனங்களும் பகல் நேரத்தில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றன. மேலும் அடர்ந்த மேகக்கூட்டங்கள் தரையிறங்கியதை சாரல் மழையில் நனைந்தபடி சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். இதற்கிடையே நேற்று கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. இதனால் நகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.