கூடுதல் பொறுப்பு வகிக்கும் மையங்களை பூட்டி சாவியை ஒப்படைக்கும் போராட்டம்
குடவாசலில் ஊக்கத்தொகை வழங்காததால் கூடுதல் பொறுப்பு வகிக்கும் மையங்களை அங்கன்வாடி ஊழியர்கள் பூட்டி சாவியை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடவாசல்:
குடவாசலில் ஊக்கத்தொகை வழங்காததால் கூடுதல் பொறுப்பு வகிக்கும் மையங்களை அங்கன்வாடி ஊழியர்கள் பூட்டி சாவியை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாவியை ஒப்படைக்கும் போராட்டம்
குடவாசலில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கூடுதல் பொறுப்பு வகிக்கும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை 12 ஆண்டுகளாக வழங்காததை கண்டித்து நேற்று மாலை கூடுதல் பொறுப்பு வகிக்கும் மையத்தினை பூட்டி சாவியை குடவாசல் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் விக்டோரியா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பிரேமா முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன் பேசினார்.
கோஷங்கள்
கூடுதல் பொறுப்பு வகிக்கும் அங்கன்வாடி மைய சாவியை குடவாசல் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலரிடம் ஒப்படைத்த அங்கன்வாடி ஊழியர்கள், அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் மாவட்ட துணைத்தலைவர் திரிபுரசுந்தரி நன்றி கூறினார்.