ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வலியுறுத்தி ஆலங்குளத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-05-17 19:25 GMT
ஆலங்குளம், 
ஆலங்குளம் டி.என்.சி. முக்கு ரோட்டில் ஓய்வுபெற்ற சிமெண்டு ஆலை தொழிலாளர்கள் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆலங்குளம் சிமெண்டு ஆலையில் வேலை பார்த்த 1500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இப்போது வரை ஓய்வு பெற்று உள்ளனர். இவர்களுக்கு மாத ஓய்வு ஊதியமாக ரூ.1000 முதல் ரூ.2500 வரை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ஓய்வூதியம் தங்களது வாழ்வாதாரத்திற்கு போதுமானதாக இல்லை என்றும் மாதம் ரூ.6800 முதல் ரூ.10,000 வரை ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதில் ஹெச்.எம்.எஸ்.யூனியன் மாநில தலைவர் மூக்கையா, ராஜேந்திரன், பார்வர்டு பிளாக் யூனியன் நிர்வாகி சந்திரன், அ.தி.மு.க. யூனியன் நிர்வாகி முத்துச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை சிமெண்டு ஆலை தொழிலாளி ராஜேந்திரன் செய்திருந்தார். 

மேலும் செய்திகள்