சர்வேயருக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை

ரூ.1000 லஞ்சம் வாங்கிய சர்வேயருக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.;

Update:2022-05-18 00:52 IST
நாகர்கோவில்:
ரூ.1,000 லஞ்சம் வாங்கிய சர்வேயருக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
சர்வேயர் கைது
அம்மாண்டிவிளை அருகே உள்ள சாத்தான்விளை பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவருக்கு அந்த பகுதியில் நிலம் உள்ளது. அந்த நிலத்திற்கு உட்பிரிவு பட்டா பெறுவதற்கு கடந்த 2009-ம் ஆண்டு குளச்சல் சர்வேயர் மனோகரன் (வயது 66) என்பவரை சந்தித்துள்ளார்.
அப்போது மனோகரன் நிலத்தை அளக்க ரூ.1,000 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பார்த்தசாரதி நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். பின்னர் போலீசாரின் அறிவுரை படி 24-11-2009 அன்று சர்வேயர் மனோகரனிடம் பார்த்தசாரதி ரூ.1,000 கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மனோகரனை அதிரடியாக கைது செய்தனர்.
ஓராண்டு சிறை
இதனை தொடர்ந்து நாகர்கோவில் தலைமை குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் அரசு வக்கீல் சீனிவாசன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி மாயகிருஷ்ணன் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட மனோகரனுக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்