தல்லாகுளம் பெருமாள் கோவில் உண்டியல் திறப்பு
தல்லாகுளம் பெருமாள் கோவில் உண்டியல் திறப்பு;
அழகர்கோவில்
மதுரை அருகே கள்ளழகர் கோவிலின் உபகோவிலான தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலின் வளாகத்தில் உண்டியல்கள் நேற்று திறந்து எண்ணப்பட்டது. அதில் ரூ.3 லட்சத்து, 33 ஆயிரத்து 321 காணிக்கையாக வரப் பெற்றிருந்தது. அப்போது கள்ளழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் துணை ஆணையர் சுரேஷ், தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, மண்டல ஆய்வாளர் கர்ணன், கண்காணிப்பாளர் செந்தில் மற்றும் கோவில் பணியாளர்கள் உடன் இருந்தனர்.