பஸ்சில் பயணியிடம் ரூ.5 லட்சம் திருட்டு
பஸ்சில் பயணியிடம் ரூ.5 லட்சம் திருட்டு;
நாகமலைபுதுக்கோட்டை
நாகமலைபுதுக்கோட்டை என்.ஜி.ஒ., காலனியைச் சேர்ந்தவர் நாராயணன் (வயது 58). இலர் ரூ.5 லட்சம் பணத்துடன் அரசு பஸ்சில் மதுரை பெரியார் பஸ் நிலையத்திற்கு சென்றார். அவரது மனைவி, மகள் உடன் பயணித்தனர். துவரிமான் அருகே சென்றபோது பையில் வைத்திருந்த பணம் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து நாராயணன் கொடுத்த புகாரின் பேரில் நாகமலைபுதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.