அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-05-17 19:19 GMT
விருதுநகர், 
விருதுநகர் தாசில்தார் செந்தில்வேல் ஜீப்பில் ஆமத்தூர் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தார். அதில் அனுமதியின்றி  5 யூனிட் மணல் ஏற்றிச்சென்றது தெரியவந்தது. 
மணல் லாரியை பறிமுதல் செய்த தாசில்தார் ஆமத்தூர் போலீசில் ஒப்படைத்தார். ஆமத்தூர் போலீசார் லாரியை ஓட்டி வந்த தீபன் சக்கரவர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

மேலும் செய்திகள்