விசைத்தறி உரிமையாளர்கள் 2-வது நாளாக போராட்டம்

நூல் விலை உயர்வை கண்டித்து விசைத்தறி உரிமையாளர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2022-05-17 19:02 GMT
ராஜபாளையம்,
ராஜபாளையம் நகர் மற்றும் அருகே உள்ள ஆவரம்பட்டி, சேத்தூர், முத்துசாமிபுரம், புனல்வேலி, மலையடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி நூல் சேலை உற்பத்தி செய்யும் சுமார் 5 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கி வருகிறது. இந்தநிலையில் கடந்த ஒரு வருடத்தில் நூல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் குற்றம் சாட்டினர்.
இதன் காரணமாக தற்போது தொழில் நடத்த முடியாத நிலையில் இருப்பதாகவும், அதிக விலை கொடுத்து நூல் வாங்கி சேலை உற்பத்தி செய்தாலும், அதை கூடுதல் விலைக்கு விற்க முடியவில்லை எனவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
நூல் விலை உயர்வை கண்டித்து விசைத்தறி உரிமையாளர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சிறு விசைத்தறி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் பாண்டிராஜ் கூறுகையில்,  நூல் விலை ஏற்றத்தால்  1 லட்சம் வரை சேலைகள் தேங்கி உள்ளன. 2 நாட்கள் வேலை நிறுத்தத்தினால் ரூ.54 லட்சம் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதேநிலை நீடித்தால் நெசவுத்தொழில் மிகவும் பாதிக்கப்படும். ஆகையால்  நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

மேலும் செய்திகள்