மல்லாங்கிணறில் மஞ்சப்பை இயக்கம்

மல்லாங்கிணறில் மஞ்சப்பை இயக்கத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.;

Update: 2022-05-17 18:59 GMT
காரியாபட்டி, 
பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக, பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சப்பை பயன்படுத்த வேண்டி பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சி காரியாபட்டி அருகே மல்லாங்கிணறில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் துளசிதாஸ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மிக்கேலம்மாள் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழகன் வரவேற்றார். அமைச்சர் தங்கம்தென்னரசு மஞ்சப்பைகளை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் போஸ் ஜெயசந்திரன், சுமதிசந்திரன், கருப்பையா, பாலச்சந்திரன், வைஷ்ணவி, நகர செயலாளர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்