தெருநாய்கள் கடித்ததில் புள்ளிமான் சாவு

ராயக்கோட்டை அருகே தெருநாய்கள் கடித்ததில் புள்ளிமான் சாவு

Update: 2022-05-17 18:55 GMT
ராயக்கோட்டை:
ராயக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஊடேதுர்க்கம் காப்புக்காட்டில் இருந்து புள்ளிமான் ஒன்று வழிதவறி நேற்று காலை திம்ஜேப்பள்ளி ஊராட்சி அடக்கம் கிராமத்திற்கு வந்தது. அப்போது அங்கு சுற்றித்திரிந்த தெருநாய்கள் மானை விரட்டி கடித்தது. இதை பார்த்த பொதுமக்கள் தெருநாய்களை விரட்டி விட்டு மானை மீட்டனர். தெருநாய்கள் கடித்ததில் மானுக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து ராயக்கோட்டை வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் கால்நடை டாக்டர் வெங்கடசுப்பிரமணியன் ஆகியோர் விரைந்து வந்து மானுக்கு சிகிச்சை அளித்தனர். இதைத் தொடர்ந்து வனத்துறையினர் மானுக்கு சிகிச்சை அளிக்க வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் மான் உயிர் இழந்தது. இதையடுத்து புள்ளிமானை பாவாடரப்பட்டியில் வனத்துறைக்கு சொந்தமான இடத்திற்கு கொண்டு சென்று கால்நடை மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். தொடர்ந்து மானை குழி தோண்டி வனத்துறையினர் புதைத்தனர்.

மேலும் செய்திகள்