சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு
சிங்காரப்பேட்டை அருகே சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
ஊத்தங்கரை:
சிங்காரப்பேட்டை பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன் பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். இவனை பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் 19 வயது மாணவர் ஒருவர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவன் தனது பெற்ேறாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் சிங்காரப்பேட்டை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை கைது செய்தனர்.