எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பழனியில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பழனி:
திண்டுக்கல் மேற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில், பழனி குளத்து ரவுண்டானாவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் கைசர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது, உத்தரபிரதேசத்தில் உள்ள கியான்வாபி மசூதிக்கு சீல் வைக்கப்பட்டதை கண்டித்தும், வழிபாட்டு தலங்கள் சட்டப்பிரிவை அமல்படுத்த கோரியும் கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.