தடகள போட்டியில் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சாதனை
மாநில அளவிலான தடகள போட்டியில் வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்தனர்.;
வேலூர்
தமிழ்நாடு தடகள மன்றம் நடத்திய 94-வது தமிழ்நாடு மாநில சீனியர் தடகள போட்டிகள் கடந்த 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை கோயம்புத்தூரில் நடைபெற்றது.
இதில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர் ஓட்ட பந்தயத்தில் வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் லோகேஷ், ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு 3-ம் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.
மாநில அளவிலான தடகள போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் மலர், வணிகவியல் துறைத்தலைவர் ஷீலா, உடற்கல்வி ஆசிரியர் அகிலன் மற்றும் பலர் பாராட்டு தெரிவித்தனர்.