மலை கிராம மக்களுக்கு மருத்துவ சிகிச்சை

மஞ்சள் காமாலை நோயை கட்டுப்படுத்த மலை கிராம மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

Update: 2022-05-17 18:22 GMT
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கொடகரை மலை கிராமத்தில் சுமார் 465 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் டாக்டர்கள் வெங்கடாசலம், அருண் ஆகியோர் தலைமையில் மருத்துவ குழுவினர் கொடகரை கிராமத்திற்கு சென்று பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு ரத்த பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்தனர். அப்போது ஒரு சிலருக்கு மஞ்சள் காமாலை நோய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காய்ச்சிய நீரை பருக வேண்டும். சுற்றுப்புறங்களை சுகாதாரமாக வைத்து கொள்ள வேண்டும் என்று கிராமமக்களுக்கு மருத்துவ குழுவினர் அறிவுறுத்தினர். 

மேலும் செய்திகள்