பரமத்தி பேரூராட்சி அலுவலகத்தை அ.தி.மு.க.வினர் முற்றுகை

பரமத்தி பேரூராட்சி அலுவலகத்தை அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்டனர்.;

Update: 2022-05-17 18:22 GMT
பரமத்திவேலூர்:
பரமத்தி பேரூராட்சியில் நாமக்கல் செல்லும் சாலையில் முறையாக ஏல அறிவிப்பு செய்யாமல் சில ஒப்பந்ததாரர்கள் மூலம் பேரூராட்சி சார்பில் கடைகள் கட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து பரமத்தி நகர அ.தி.மு.க. செயலாளர் சுகுமார் தலைமையில் இணை செயலாளர்கள் மாலதி, கலைமணி, பொருளாளர் அனீபா ஆகியோர் முன்னிலையில் அ.தி.மு.க.வினர் பரமத்தி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். பின்னர் பேரூராட்சி தலைவர் மணி, செயல் அலுவலர் செல்வக்குமார் ஆகியோரிடம் ஏல அறிவிப்பு வெளியிட்டு கடைகள் கட்டப்பட வேண்டும் என்று கூறி கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்று கொண்ட தலைவர், செயல் அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து அ.தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த முற்றுகை போராட்டத்தில் பேரூராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சகுந்தலா, காந்திமதி ராமன், அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி சக்திவேல், நகர துணை செயலாளர் ரமீஜாபானு மற்றும் அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்