குடும்ப பிரச்சினையில் தொழிலாளி தற்கொலை

திண்டுக்கல் அருகே குடும்ப பிரச்சினையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.;

Update: 2022-05-17 18:19 GMT
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் சாஸ்திரிநகரை சேர்ந்தவர் விமல்ராஜ் (வயது 27). ஓட்டல் தொழிலாளி. இவரது மனைவி எஸ்கலீன் எட்மீனாமேரி. இவர்களுக்கு இரட்டைக்குழந்தைகள் உள்ளன. இந்தநிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு எஸ்கலீன் எட்மீனாமேரி தனது குழந்தைகளுடன் அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த விமல்ராஜ் தொட்டனூத்து மாதா கோவில் அருகேயுள்ள புளியமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்