அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம்
திருப்பத்தூரில் அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராசு தலைமை தாங்கினார். செயலாளர் ராம்செட்டி, சேகரன், சவுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் கார்மேகம், மாவட்ட செயலாளர் ஞானசேகரன் உட்பட பலர் பேசினார்கள்.
மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவ செலவை திரும்பப்பெற அளிக்கப்பட்ட 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் நிலுவையில் உள்ளதால் உடனடியாக தமிழக அரசு தீர்வு காண வேண்டும், சட்டமன்ற தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், கூடுதல் ஓய்வூதியம் பெறும் வயதினை 80-ல் இருந்து 70 ஆக குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சவுந்தர்ராஜன், இளங்கோவன், ஜவஹர்லால்நேரு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.