உயர்கோபுர மின்விளக்கு அமைக்க பூமி பூஜை
பெரியகுளம் புதிய பஸ்நிைலயத்தில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க பூமி பூஜை நடந்தது.
பெரியகுளம்:
பெரியகுளம் புதிய பஸ் நிலையத்தில் போதிய மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இதனையறிந்த தேனி நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பஸ்நிலையத்தில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்க ரூ.9 லட்சத்தை ரவீந்திரநாத் எம்.பி. ஒதுக்கீடு செய்தார். இந்த மின்விளக்கு அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ெபரியகுளம் நகர அ.தி.மு.க. செயலாளர் ராதா தலைமை தாங்கினார். நகர துணைச் செயலாளர் அப்துல்சமது, நகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் நாராயணன், மாவட்ட பிரதிநிதி அன்பு, முன்னாள் அரசு வக்கீல் வெள்ளைச்சாமி, நகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.