சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனைக்கு வரலாம் எனக்கருதி கார்த்தி சிதம்பரம் பண்ணை வீட்டின் முன் திரண்ட காங்கிரஸ் கட்சியினர்
சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனைக்கு வரலாம் என கருதி, கார்த்தி சிதம்பரம் எம்.பி.யின் பண்ணை வீட்டின் முன் காங்கிரசார் திரண்டனர். ஆனால், வீடு பூட்டியே கிடந்ததால் திரும்பி சென்றனர்.
காரைக்குடி,
சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனைக்கு வரலாம் என கருதி, கார்த்தி சிதம்பரம் எம்.பி.யின் பண்ணை வீட்டின் முன் காங்கிரசார் திரண்டனர். ஆனால், வீடு பூட்டியே கிடந்ததால் திரும்பி சென்றனர்.
சி.பி.ஐ. சோதனை
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மகனும் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் ஆகியோரது சென்னை, டெல்லியில் உள்ள வீடுகள், அலுவலகங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். ப.சிதம்பரத்தின் சொந்த ஊர் காரைக்குடி அருகே உள்ள கண்டனூர் ஆகும். காரைக்குடியை அடுத்த மானகிரி என்ற இடத்தில் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமாக பண்ணை வீடு உள்ளது.
பூட்டி கிடந்தது
இந்த பண்ணை வீட்டுக்கு சி்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்த வரலாம் என காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பரபரப்பு இருந்தது.
எனவே பத்திரிகையாளர்களும், காங்கிரஸ் கட்சியினரும் அங்கு திரண்டு காத்திருந்தனர். ஆனால், வீடு பூட்டியே கிடந்ததால் அங்கு காத்திருந்துவிட்டு திரும்பி சென்றனர்.
இதே போல் ப.சிதம்பரம் சொந்த ஊரில் உள்ள வீட்டுக்கும் காங்கிரஸ் கட்சியினர் சென்றுவந்த வண்ணமாக இருந்தனர்.