ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

தேனியில் ஓய்வூதியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-17 17:45 GMT
தேனி: 

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமை தாங்கினார். 

ஆர்ப்பாட்டத்தில் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பல்வேறு நிலைகளில் மருத்துவ செலவை திரும்ப பெறும் மனுக்கள் 20 ஆயிரத்துக்கும் மேல் நிலுவையில் உள்ளதை தமிழக அரசு தீர்த்து வைக்க வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள், வனத்துறை காவலர்கள் மற்றும் ஊராட்சி எழுத்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்டவர்கள் அனைவரையும் பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்