தக்கலை அருகே லாரி- கார் மோதல்; வாலிபர் படுகாயம்

தக்கலை அருகே லாரி கார் மோதல் வாலிபர் படுகாயம்

Update: 2022-05-17 17:42 GMT
தக்கலை, 
கேரள மாநிலம் பாறசாலை, தினவிளையை சேர்ந்தவர் அனில் (வயது38), லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் நாகர்கோவிலில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி லாரியை ஒட்டி சென்று கொண்டிருந்தார். தக்கலை அருகே உள்ள குமாரகோவில் விலக்கு பகுதியில் வந்த போது எதிரே வந்த சொகுசு கார் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. காரை ஓட்டி வந்த பார்வதிபுரத்தை அடுத்த சிவபுரத்தை சேர்ந்த ரெஞ்சித் (29) காயமடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். 
இந்த விபத்தினால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இந்த விபத்து குறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்