நாகர்கோவிலில் அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்

நாகர்கோவிலில் அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்

Update: 2022-05-17 17:39 GMT
நாகர்கோவில், 
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க குமரி மாவட்டக்கிளை சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் நேற்று பிற்பகல் முதல் மாலை வரை தர்ணா போராட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படாமல் உள்ள சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் உள்ளிட்ட அனைத்து சிறப்பு ஓய்வூதியர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் 7 ஆயிரத்து 850 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் அல்போன்ஸ் தலைமைதாங் கினார். மாவட்ட செயலாளர் ஐவின், பள்ளி மற்றும் கல்லூரி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அய்யப்பன் பிள்ளை ஆகியோர் பேசினர். சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் கிறிஸ்டோபர் தர்ணா போராட்டத்தை நிறைவு செய்து பேசினார். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட பொருளாளர் நடராஜன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்